search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்"

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. #INDvWI
    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவரில் 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்தியா 14.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இந்தியா முதல் மற்றும் 4-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 2-வது போட்டி டை ஆனது.

    5 ஆட்டத்தில் 453 ரன் குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இது ஒரு முழுமையான செயல்பாடு. எல்லா பெருமையும் பந்து வீச்சாளர்களையே சாரும். சரியான இடத்தில் பந்துகளை பிட்ச் செய்தனர். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியம் அளித்தது. நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. எல்லா துறையிலும் அணி சிறப்பாக செயல்படுவது நல்ல உணர்வை தருகிறது.

    கலீல் அகமது சிறப்பாக பந்து வீசினார். 4-வது வரிசையில் களம் இறங்கிய அம்பதி ராயுடு பொறுப்பை உணர்ந்து விளையாடினார். ஹர்த்திக் பாண்டியா அணிக்கு திரும்பும்போது இன்னும் வலிமைபெறும்.



    ஒரு கேப்டனாக ரன்களை குவிப்பது எப்போதுமே எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ரன் குவிப்பது என்பது எல்லா நேரத்திலும் நடப்பதில்லை. ஆனால் நான் களத்தில் செல்லும்போது நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். நான் விருதுகளுக்காக விளையாடுவதில்லை. அணி வெற்றிக்காக உதவவும், தொடரை கைப்பற்றவும் விளையாடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 4-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 20 ஓவர் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.

    நவம்பர் 21-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை சுமார் இரண்டு மாதம் விளையாடுகிறது. இந்த தொடர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குமிடையில் கையெழுத்து ஆகியிருக்கும். அதில் வீரர்களுக்கான தங்குமிடும், அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள், சாப்பாடு மெனு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.


    கோப்புப்படம்

    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது. அதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழும்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில்தான் வீரர்களுக்கான உணவு மெனுவில் இருந்து மாட்டிறைச்சியை நீக்க கூறியதாக கூறப்படுகிறது. அதற்குப்பதில் வெஜிடேரியன் மெனுவை அதிகரித்துள்ளது.
    ஜடேஜா சுழலில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் 104 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்குகிறது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. மும்பையில் விளையாடிய அதே அணியோடு களம் இறங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரன் பொவேல், ரோவ்மன் பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் கிரன் பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.



    அடுத்து வந்த ஷாய் ஹோப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். இதனால் இரண்டு ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ரோவ்மன் பொவேல் உடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியால் ஓரளவிற்குத்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஸ்கோர் 36 ரன்னாக இருக்கும்போது சாமுவேல்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மையரை 9 ரன்னில் ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா சுழலில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.



    ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து 25 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 104 ரன்னில் சுருண்டது. ஜடேஜா அபாரமான பந்து வீசி 9.5 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். பும்ரா, கலீல் அஹமது தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா சேஸிங் செய்ய இருக்கிறது.
    திருவனந்தபுரத்தில் 1.30 மணிக்கு தொடங்கும் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியான ஒரு மணிக்கு சுண்டப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.



    இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. மும்பையில் விளையாடிய அதே அணி களம் இறங்குகிறது. இந்தியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ரவிந்திர ஜடேஜா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அஹமது, 11. பும்ரா.
    இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் பயிற்சியாளர் நிக் போதா தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என எளிதில் கைப்பற்றியது. ஆனால் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கடும் போட்டியாக திகழ்ந்தது. இரண்டு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற முடியாவிட்டாலும், 3-வது போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

    நாளை நடக்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை டிரா செய்யும். தோல்வியடைந்தால் தொடரை இழக்கும். ஒருநாள் போட்டியை அடுத்து டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.



    நாளை ஐந்தாவது போட்டி நடைபெறும் நிலையில், நாங்கள் இங்கு வந்தது இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காக என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிக் போத்தாஸ் கூறுகையில் ‘‘கற்றுக்கொள்வதற்கு இந்தியா சிறந்த அணி. நாங்கள் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு மட்டும் வரவில்லை. கற்றுக் கொள்வதற்கும்தான் வந்துள்ளோம். இங்கே வந்து தலைசிறந்த அணிக்கெதிராக விளையடும் வாய்ப்பு கிடைத்தது சிறப்பானது’’ என்றார்.
    கடவுளின் நாடான கேரளாவிற்கு வருவது மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவரும் கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvWI #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டு வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கும் நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி கேரளா சென்றுள்ளது. அங்கு சென்ற இந்திய அணிக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது கேரளா கடவுளின் நாடு. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் கேரளாவிற்குச் செல்ல வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி இவ்வாறு கூறியதற்கு கேரளா கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி டுவிட்டர் மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
    அம்பதி ராயுடு நம்பர் 4 என்ற மர்மத்தை தீர்த்துவிட்டார், இனிமேல் அதுபற்றி உலகக்கோப்பை வரை எந்த பேச்சும் இருக்காது என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RohitSharma
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கு தயார்படுத்தி வருகிறது. 4-வது வரிசையில் களம் இறங்கி விளையாடுவதற்கு இதுவரை நிலையான பேட்ஸ்மேன் அமையவில்லை. இந்தியா ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்ப வழங்கியது.

    இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கியபோது அம்பதி ராயுடு 4-வது இடத்திற்கு சரியான நபராக இருப்பார். அவருக்கு உலகக்கோப்பை வரை ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.

    நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் ரோகித் சர்மா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 80 பந்தில சதம் அடித்தார். ரோகித் சர்மாவுடன் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.



    ரோகித் சர்மா 162 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணியில் நீண்ட நாட்களாக நம்பர் 5 மர்மமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அம்பதி ராயுடு அதை தீர்த்துவிட்டார் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மும்பை போட்டியில் அம்பதி ராயுடு சதம் அடித்தது மிகவும் முக்கியமானது. நம்பர் 4 என்ற மர்மத்தை அவர் தீர்த்துவிட்டார். உலகக்கோப்பை வரை நம்பர் 4 பற்றி யாரும் பேசமாட்டார்கள்’’ என்றார்.
    சாமுவேல்ஸை வீழ்த்தியபின் ஆத்திரமுட்டும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்திய இளம் பந்து வீச்சாளரான கலீல் அஹமதுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #INDvWI, #ICC
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 377 ரன்கள் குவித்தது.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (0) குல்தீப் யாதவும், பொவேலை (4) விராட் கோலியும் டைரக்ட் ஹிட் மூலம் ரன்அவுட் ஆக்க, இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது ஹெட்மையர் (13), சாமுவேல்ஸ் (18), ரோவ்மேன் பொவேல் ஆகியோரை தனது இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் பந்தால் வெளியேற்றினார்.



    5 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாக இருந்தார். சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, சாமுவேல்ஸ் அருகில் சென்று ஆத்திரமுட்டும் வகையில் உற்சாக மிகுதியால் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    கலீல் அஹமதின் செயல் ஐசிசி-யின் வீரர்களின் நன்னடத்தை விதிக்கு எதிராக இருந்ததால் மைதான நடுவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதனால் ஐசிசி எலைட் நடுவர் பிராட் அவரை எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கினார். போட்டிக்குப்பின் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் அதற்கு மேல் விசாரணை இல்லை என ஐசிசி முடிவு செய்துள்ளது.
    மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 162 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். #INDvWI #RohitSharma
    இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி சூப்பர்மேனாக ஜொலிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 162 ரன்களை குவித்தார். இந்த தொடரில் அவர் 2-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் அவர் 152 ரன் எடுத்து இருந்தார்.

    ஒட்டு மொத்தமாக ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 7-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தெண்டுல்கர் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தலா 5 முறையும், ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), ஜெயசூர்யா (இலங்கை), விராட் கோலி (இந்தியா) ஆகியோர் தலா 4 முறையும் 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர்.



    162 ரன் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா தொடர்ந்து 6-வது ஆண்டாக ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி கடந்த பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 160 ரன் எடுத்து இருந்ததை அவர் தற்பேது முந்தி உள்ளார்.
    ரோகித் சர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 60 பந்தில் 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

    அரைசதம் அடித்தபின்னர் ரோகித் சர்மா தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். மறுமுனையில் அம்பதி ராயுடும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 98 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    இந்த ஜோடி 312 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 137 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா - அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது.

    அடுத்து அம்பதி ராயுடு உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். அம்பதி ராயுடு 80 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி அவர் சதம் அடித்த அடுத்த பந்தில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 47.1 ஓவரில் 344 ரன்கள் எடுத்திருந்தது.

    டோனி 15 பந்தில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்மிழந்தார். 6-விக்கெட்டுக்கு கேதர் ஜாதவ் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவ் 7 பந்தில் 16 ரன்களும், ஜடேஜா 4 பந்தில் 7 ரன்களும் அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்க உள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். #INDvWI #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர், ரோகித் சர்மா பொறுப்பை உணர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 98 பந்தில் சதம் அடித்தார்.

    இது ரோகித் சர்மாவின் 21-வது சதம் ஆகும். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 21-வது சதத்தை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹசிம் அம்லா 116 இன்னிங்சிலும், விராட் கோலி 138 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 183 இன்னிங்சிலும் 21 சதங்கள் அடித்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

    ரோகித் சர்மா இந்த சதத்துடன் 186 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 200 இன்னிங்ஸ் உடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    தொடக்க வீரராக களம் இறங்கி 19 சதங்கள் விளாசியுள்ளார். அதிவேகமாக 19 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். ஹசிம் அம்லா 102 இன்னிங்ஸ் உடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 107 இன்னிங்ஸில் அடித்து 2-வது இடம் பிடித்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் 115 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், 152 இன்னிங்ஸ் உடன் தில்சன் 4-வது இடத்திலும், 172 இன்னிங்ஸ் உடன் கிறிஸ் கெய்ல் 5-வது இடத்திலும் உள்ளனர்.



    2013-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் அதிக சதங்கள் விளாசியர் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார். விராட் கோலி 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 19 சதங்கள் அடித்துள்ளார். ஹசிம் அம்லா 16 சதங்களும், தவான் 15 சதங்களும் அடித்துள்ளனர்.

    தொடர்ச்சியாக 9 தொடர்களில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். 1. சாம்பியன்ஸ் டிராபி, 2. இலங்கையில் நடைபெற்ற தொடர் (2 சதங்கள்), 3. இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர், 4. இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து தொடர். 5. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை தொடர், 6. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர், 7. இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர், 8. ஆசிய கோப்பை, 9. இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்.
    4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.



    அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 59 ரன்னுடனும், அம்பதி ராயுடு 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×